அன்னை சாரதா தேவியாரின் அன்பு முரசு
படிப்படியாகவே குண்டலினி சக்தி எழும், ஆண்டவனது நாமத்தை ஜபிப்பதால் நீ எல்லாவற்றையும் உணர்வாய். மனம் அமைதியாக இல்லாவிடினும் கூட நீ ஓரிடத்தில் அமர்ந்து புனித நாமத்தைப் பத்து லட்சம் முறை ஜபிக்கலாம். குண்டலினி எழுவதற்கு முன் அனாஹா ஒலி கேட்கும், ஆனால் தெய்வீக அன்னையின் அருளின்றி எதுவுமே கிட்டாது.