4 – ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.
ராகுவின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். உறுதியான மனம் கொண்டவர்கள். எதையும் திட்டவட்டமாகச் செயல்படுத்துவார்கள். கண்டிப்பான குணம்கொண்டவர்கள். தோல்வியைக் கண்டு துவண்டு விடுபவர்கள் என்றாலும், விட்டுக்கொடுக்கும் குணம் இருந்தால் நிரந்தரமான வெற்றியைப் பெறலாம். மற்றவர்களை அனுசரித்து நடந்தாலே இவர்களுக்கு தாமாக முன்னேற்றம் ஏற்படும்.