நட்பு
நட்பு என்பது உபயோகத்தோடு சம்பந்தமாகி விட்டால் உபயோகம் தீர்ந்ததும் நட்பு முறிந்துவிடும். நட்பு முறியாது இருக்கிறது என்றால் அங்கு பரஸ்பரம் நட்பாய் உள்ளவர்கள் உபயோகமாய் இருக்கிறார்கள் என்று அர்த்தம் நட்பை உயர்வாய் எண்ணிக்கொண்டிருப்பவர்களுக்கு இது கொச்சையாய் தெரியலாம் நட்பை அசிங்கப்படுத்துவதாயும் நினைக்கலாம். ஆனால் சரியாய் நின்று உற்றுப்பார்த்தால் இந்த விஷயம் புரியும் உபயோகப்படாத எதுவும் இயற்கையில் நீண்ட காலம் இருந்தது இல்லை. நட்பும் இதற்க்கு விதி விலக்கல்ல.