நல்வேளை
நல்வேளை பசுமையான இலைகளை பறித்து, மற்ற கீரைகளுடன் சேர்த்துக் கலவைக் கீரையாகத் துவட்டிச் சாப்பிடலாம். இலைகளை அளவாகச் சேர்த்து, கார குழம்பு செய்து சாப்பிட ஒற்றைத் தலைவலி குணமாகும். அதோடு, ஜலதோஷம் மற்றும் காய்ச்சலுக்கு நல்வேளை சிறந்த துணை மருந்தாகத் திகழ்கிறது நல்வேளை இலை சிறிதளவு உப்பு சேர்த்து அரைத்து துவையலாகச் செய்து சாப்பிட இருமல் தீரும்.