16 – ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.

கேதுவின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். துணிச்சலும், ஆற்றலும், அறிவுக் கூர்மையும் உடையவர்கள். தமது திறமையை ஆக்கப் பணிகளுக்குச் செயல்படுத்துவார்கள். மாறாக செயல்படுவார்களேயானால் அதிக இல்லல்களையே பெற்றிடுவார்கள். கலைகளில் தேர்ச்சியுடையவர்கள். எந்த ஒரு காரியத்திலும் துணிவுடன் ஈடுபடுவார்கள்.

15 – ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்

 சுக்கிரனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும் நல்ல அதிர்ஷ்டமும் முன்னேற்றமும் உடையவர்களாகவே திகழ்வார்கள். ஏதாவது ஒரு கலையில் தேர்ச்சியால் நல்ல பெயரும், புகழும், பொருளும் பெறுவார்கள். பேச்சாற்றல் கொண்டவர்கள். தமது வாக்கு சாதுர்யத்தால் நல்ல முன்னேற்றம் தேடிக்கொள்வார்கள்.

14 – ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.

புதனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். இவர்கள் பொதுநலத் தொண்டு புரிவதிலும் சிலர் தெய்வீகத் தொண்டு புரிவதிலும் மக்கள் மத்தியில் புகழ் பெறுவார்கள். எப்போதும் பிரயாண ஈடுபாடு இருந்து கொண்டே இருக்கும். பெண்கள் விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இவர்கள் இருக்க வேண்டும்.

13 – ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.

 ராகுவின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும் பலரின் எதிர்ப்புக்கு ஆளாவார். இவர்கள் நம்பக்கூடாத வர்களை நம்பி மோசம் போவார்கள். நண்பர்களே துரோகிகள் என்று சொல்லலாம். எனவே, இவர்கள் வாழ்க்கையில் குறுக்கிடும் துயரங்களையும், எதிர்ப்புகளையும், தோல்விகளையும் பொருட்படுத்தாமல் எதிர் நீச்சல் போட்டால் சிறிது, சிறிதாக முன்னேறி உயர்நிலையைப் பெற்றே தீரலாம்.

12 – ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.

குருவின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். இவர்கள் இளம் வயதில் மிகவும் வறுமை வாட்டத்தில் இருப்பார்கள். நல்ல கல்வித் தகுதியைப் பெற்று நீதித்துறையில் உயர்ந்த பதவி பெறுவார்கள். பொது நலத் தொண்டிலும், ஆன்மீக ஈடுபாட்டிலும் அதிகமான ஆர்வம் கெண்டவர்கள். நல்ல வாக்குத்திறமையை உடையவர்கள். பொருளாதார சிறப்பு நன்றாக அமையும்.

11 – ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.

சந்திரன் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும்  வாழ்க்கையில் ஒரே சீரான அதே நேரத்தில் சிறிது சிறிதாக முன்னேற்றம் அடைபவர்கள். உயர்தர வாழ்க்கையை வாழ்பவர்கள். திடீர் தனயோகம் பெறுவார்கள் தமக்கு மிகவும் வேண்டியவர்களினால் சில பாதிப்புகள் ஏற்பட்ட போதிலும் அதிக நஷ்டம் ஏற்படாது. எது எப்படி இருந்தபோதிலும் கவலையை மறப்பவர்கள் நல்ல முன்னேற்றம் பெறுபவர்கள்.

10 – ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.

சூரியனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும்  இவர்களது மனதை அவ்வளவு சுலபத்தில் எடைபோட முடியாது. இவரது பேச்சையும், செயலையும் வைத்து இதுதான் இவரது கருத்து என்று கண்டுபிடிக்க முடியாது. அன்புக்கு அடிமையாவார்கள். அடக்கமும், முன் எச்சரிக்கையும் உடையவர்கள். எப்போதும் பார்வைக்கு சந்தோஷமான தோற்றத்துடனே இருப்பார்கள். துன்பத்திலும், துயரத்திலும் புன்சிரிப்புடன் இருப்பார்கள்.

வாழறது சுகம்

நல்லா யோசிச்சு பாரு உன்னைவிட உன்மேல் அக்கறை இருக்கிறவங்க வேற யார். உன்னை விட உன்னைப்பத்தி நல்லா தெரிஞ்சவங்க யார் இதுக்கு சரியான பதில் உனக்கு உனக்குள்ளயிருந்த கிடைச்சுதுன்னா வாழ்க்கை, அதாவது வாழறது சுகம், சுலபம்.

பிரியமுள்ளவர்களிடத்து

நமக்கு பிரியமுள்ளவர்கள்  சொல்லும் வசை சொற்களுக்கு பொருள் இருப்பதில்லை, பிரியம், உறவு, பாசம், ஆகியவைகளின் அன்பு பெருக்கில் சொற்கள் கரைந்து போய் விடும் போது அவற்றுக்கு தனியே பொருள் எங்கிருந்து கிடைக்கும் இதில் சொல்லியுள்ள விஷயத்தை என்றாவது உணர்ந்தது உண்டா அப்படி ஒரு சம்பவம் நிகழும் போது நாம் நடந்து கொண்ட விதத்தை பற்றி சிந்தித்தது உண்டா அப்படி சிந்திக்கும் போது இதில் சொன்ன விஷயம் நிஜமா, பொய்யா என்று நமக்கே தெரியவரும் அவ்வளவு தான்

உலகில் தற்போதைய ஆளுமைகளின் உண்மை சொரூபம்

சிறு குழந்தைகள் தங்கள் சந்தோஷத்திற்க்கு மண் பொம்மைகளை வைத்து விளையாடுகின்றனர். அரசியல் வாதிகள் தேசிய லட்சியங்கள் தேசபக்தி என்று உள்ளவற்றை சூதாட்ட காய்களாக வைத்து மக்களிடம் விளையாடுகின்றனர். ஆத்மவாதிகள் என கூறிக்கொள்பவர்களோ தத்துவ சாஸ்திரங்களையும் புராண இதிகாசங்களையும் சூதாட்டகாய்களாக மக்களிடம் வைத்து விளையாடுகின்றர் இது மூணும் ஒன்னுதானே சொல்லப்போனால் குழந்தைகளின் மண்பொம்மை விளையாட்டில் பிற ஜீவராசிகளுக்கோ,  மனித ஜாதிகளுக்கோ பெரிய பிரச்சனை எதுவும் வருவதில்லை

9 – தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.

அங்காரகனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். வெற்றிகரமான வாழ்க்கை அமையப்பெறுவார்கள். ஸ்திர சொத்துக்கள் விருத்தி உண்டாகும். அரசாங்க மற்றும் அரசியல் விஷயங்களில் ஈடுபாடும், அவற்றில் அனுகூலமும், வெற்றியும், பதவி, வருவாய், லாபங்களும், பெறுவார்கள். எல்லோரையும் அடக்குவார்கள். வெற்றி கொள்ள வல்லவர்கள். பிடிவாதம், கோபம் விடாமுயற்சி வைராக்கியமும் இருக்கும்.

அன்னை சாரதா தேவியாரின் அன்பு முரசு

ஒரு தரமாவது உண்மையாகக் கடவுளிடம் பிரார்த்தனை செய்தவன் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை. இடைவிடாது ஆண்டவனைப் பிரார்த்திப்பவன் அவனது அருளால் பிரேம பக்தியை அடைகிறான். குழந்தாய், , இந்தப் பிரேமையே ஆத்மிக வாழ்வின் இதயமாகும். பிருந்தாவன கோபிகள் இதனை அடைந்தனர். அவர்கள் இவுவலகத்தில் கண்ணனைத் தவிரப் பிறிதொன்றையும் உணரவில்லை.

8 – ம் தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.

சனியின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். அமைதியான வாழ்க்கையை உடையவர்கள். மதப்பற்று மிக்கவர்கள். பொதுநலச் சேவை புரிபவர்கள். நல்ல நண்பர்களை உடையவர்கள். தாமதத் திருமணம் உடையவர்கள். நேர்மையான முறையில் பணம் சேர்ப்பவர்கள். உயர்வு பெற பலரது உதவியையும் நாடுபவர்கள். அதிக முயற்சிகளையும் மேற்கொள்பவர்கள். ஏற்ற பணியை முடிக்க வல்லவர்கள்.

7 – ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்

கேதுவின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும் கடவுள் பக்தி அதிகமுடையவர்கள். எந்த ஒரு காரியத்திலும் மற்றவர்களை அனுசரித்து நடப்பார்கள்.  குடும்ப வாழ்க்கையில் அமைதிக் குறைவு ஏற்படவே செய்யும் என்றாலும் அதை சரி செய்து கொள்வார்கள். நல்ல அறிவும், ஆற்றலும் உடையவர்கள். அமைதியான குணம் கொண்டவர்கள் என்று சொல்லலாம்.

கடவுள் தரிசனத்தைப்பற்றி சாரதா தேவிஅன்னையார் கூறியது,–

கடவுள் தரிசனம் எப்படிப் பட்டது என்று உனக்குத் தெரியுமா? அது குழந்தை கையிலிருக்கும் கற்கண்டைப் போன்றது. சிலர் அதில் கொஞ்சம் கொடுக்கும்படி அதனிடம் கெஞ்சுவார்கள். ஆனால் அது அவர்கட்குக் கொடுக்கச் சற்றும் நினைப்பதில்லை. ஆயினும் தான் விரும்புகின்ற வே‍று ஒருவனது கையில் வெகு சுலபமாக அக்குழந்தை அதைக் கொடுதுவிடுகிறது. கடவுளின் தரிசனம் பெற வாழ்நாள் முழுவதும் தவஞ்செய்யும் மனிதன் வெற்றி பெறுதில்லை. ஆனால் எந்தவிதச் சிரமமுமின்றி மற்றொருவன் அதனைப் பெற்று விடுகிறான். அது கடவுளின் கருணையைப் பொறுத்தது.…

அன்னை சாரதா தேவியாரின் அன்பு முரசு

படிப்படியாகவே குண்டலினி சக்தி எழும், ஆண்டவனது நாமத்தை ஜபிப்பதால் நீ எல்லாவற்றையும் உணர்வாய். மனம் அமைதியாக இல்லாவிடினும் கூட நீ ஓரிடத்தில் அமர்ந்து புனித நாமத்தைப் பத்து லட்சம் முறை ஜபிக்கலாம். குண்டலினி எழுவதற்கு முன் அனாஹா ஒலி கேட்கும், ஆனால் தெய்வீக அன்னையின் அருளின்றி எதுவுமே கிட்டாது.

6 – ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.

சுக்கிரனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும் நல்ல உழைப்பாளி என்று சொல்லும் அளவுக்கு கடும் உழைப்பாளியாவார்கள். சகல செல்வ சுகங்களுடன் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்பதே இவர்களது  லட்சியமாகும் நடவடிக்கையாவும் பணம் சம்பாதிப்பதிலேயேதான் இருக்கும். அதற்குத் தகுந்த வகையில் மற்றவர்களைப் பக்குவப்படுத்தி சாதித்துக் கொள்வார்.

கெளரவம்

உலகின் எல்லா பகுதிகளிலும் உள்ள மக்கள் கூட்டங்களில் வம்பு, தும்புகளும் புறம் பேசுதலும், பொருளற்ற விரோதங்களும் பயனற்ற முரண்பாடுகளும் நிறைந்தது தான் இதில் இனம், மொழி, ஜாதி, பேதங்கள் எதுவுமில்லை அது குடும்பமானாலும் சரி,  சமுதாயமானாலும் சரி, இதில் சமுதாய பொருளாதாரம் முக்கிய பங்கு வகிக்கிறது கெளரவம் பார்ப்பதில் முன் காலத்தில் மதமும் ஜாதியும் கெளரவத்தை பிடித்துக்கொண்டிருந்தது பின் வந்த காலத்தில் படிப்பு அந்த இடத்தை பிடித்துக்கொண்டது இப்போது பொருளாதாரம் அந்த கெளரவம் என்கின்ற இடத்தை கோலாச்சுகிறது. அந்த…

5 – ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்க்ள்.

புதனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும் லட்சியத்துடன் வாழ்க்கயை நடத்துவபவர்கள். இவர்கள் சிறிய வயதில் முடிவெடுக்கும் திட்டத்தினால்தான் தமது வாழ்க்கையை அமைக்க முடியும். தமது லட்சிய அடிப்படையில் எதிர்காலத்தை ஒளிமயமாக ஏற்படுத்திக் கொள்வார்கள். சிலருக்கு ஆன்மீகத்தில் அளவு கடந்த ஈடுபாடும் ஏற்பட்டு விடும்.

4 – ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.

ராகுவின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். உறுதியான மனம் கொண்டவர்கள். எதையும் திட்டவட்டமாகச் செயல்படுத்துவார்கள். கண்டிப்பான குணம்கொண்டவர்கள். தோல்வியைக் கண்டு துவண்டு விடுபவர்கள் என்றாலும், விட்டுக்கொடுக்கும் குணம் இருந்தால் நிரந்தரமான வெற்றியைப் பெறலாம். மற்றவர்களை அனுசரித்து நடந்தாலே இவர்களுக்கு தாமாக முன்னேற்றம் ஏற்படும்.

எல்லாம் ஒன்றுதானா

எல்லாம் ஒன்று தான், ஆனால் எதுவும் ஒன்றல்ல. இதை புரிந்துகொள்ள வாழ்வது சுலபமாகும் வாழ்க்கையும் சுகமாகும் இதை எப்படி புரிந்து கொள்வது பலரின் வாழ்க்கையை பார்த்து அனுபவப்பட்டவர்களின் எழுத்துக்களை படித்து, சிந்தித்து நமக்குள்ளும் நம்மை சார்ந்தவர்களிடமும் பேசி என்ற படிகளின் மூலமே புரிந்து கொள்ள முடியும் இதை தவிர வேறு வழி இருப்பதாய் எனக்கு தெரியவில்லை உங்களுக்கு தெரிந்தால் சொல்லவும் கேட்டுக்கொள்கிறேன்

3 – ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.

குருவின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும் திட்டமிட்டு செயலில் இறங்குவதால் இவர்கள் பெரும் பயன் பெறமுடியும். நுட்பமான தொழில்களில் ஈடுபாடு உடையவர்கள். அதில் நல்ல எதிர்காலம் பெறுபவர்கள். எழுத்துத்துறையிலும் இவர்கள் பிரகாசிக்க முடியும். உயர்ந்த எண்ணம் உடையவர்கள். பயன்தரும் திட்டங்களை உடையவர்கள். அதை செயல்படுத்தவும் செய்வார்கள்.

மன சங்கடமில்லாமல் வாழ்க்கையை நகர்த்த

சேர்ப்பது அழிவிலும் முன்னேறுவது வீழ்ச்சியிலும் சேர்க்கை பிரிவிலும் வாழ்க்கை மரணத்திலும் முடியும் என்பதை அனைவரும் தெரிந்து புரிந்துகொள்ள வேண்டும் அப்படி புரிந்துகொண்டால் அதிக மன சங்கடமில்லாமல் வாழ்க்கையை நகர்த்திவிடலாம்

முன்னேற்றத்திற்கு வழி

தான் செய்த தவறுகளை தவறு என்று ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோறுவதுதான் உயர்ந்த பண்பு  அதுதான்  சரியான வாழ்க்கை முறை தான் செய்த தவறுகளை நினைத்து வருந்துவதும் அதை ஒப்புக்கொள்வதும் மறுபடியும் அவற்றை செய்யாமல் இருப்பதும் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும்

2.ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்

 சந்திரனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும்  உயர்ந்த லட்சியங்களை உடையவர்கள். தீவிரமாக எப்போதும் ஆராயச்சியில் ஈடுபாடு கொண்டிருப்பார்கள். அமைதியான குணம் உடையவர்கள். கற்பனைசக்தி மிகுந்தவர்கள். எதையுமே அமைதியான முறையில் செயல்பட்டு வெற்றியை பெறவேண்டும் என்ற எண்ணமுடையவர்கள். பெரும்பான்மையாக  கலைத்துறை ஈடுபாடு உடையவர்கள் 2-ம் தேதி பிறந்தவர்களாகவே  இருப்பார்கள்.

நட்பு

நட்பு என்பது உபயோகத்தோடு சம்பந்தமாகி விட்டால் உபயோகம் தீர்ந்ததும் நட்பு முறிந்துவிடும். நட்பு முறியாது இருக்கிறது என்றால் அங்கு பரஸ்பரம் நட்பாய் உள்ளவர்கள் உபயோகமாய் இருக்கிறார்கள் என்று அர்த்தம்  நட்பை உயர்வாய் எண்ணிக்கொண்டிருப்பவர்களுக்கு இது கொச்சையாய் தெரியலாம் நட்பை அசிங்கப்படுத்துவதாயும் நினைக்கலாம். ஆனால் சரியாய் நின்று உற்றுப்பார்த்தால் இந்த விஷயம் புரியும் உபயோகப்படாத எதுவும் இயற்கையில்  நீண்ட காலம் இருந்தது இல்லை. நட்பும் இதற்க்கு விதி விலக்கல்ல.

அத்தி (Ficus racemosa)

அத்தி  அத்தி காய்களை பொரியல், மசியல் அல்லது கூட்டு செய்து வாரம் ஒரு முறை சாப்பிட வயிற்றுப்புண் குணமாகும். அத்திப்பழங்கள் உண்ணத் தகுந்தவை மிகுந்த சத்துக்கள் கொண்டதான இந்தப் பழங்களை காலை உணவாக பெரிதும் விரும்பப்படுகின்றன. பலவிதமான கலாச்சார உணவுகளில் அத்திப்பழம் சேர்கிறது. அத்திப்பழங்களை குறுக்குவாட்டில் அரிந்து துண்டுகளாக்கி, தேனில் இட்டு ஊறவைத்து தயாரிக்கப்படும் அத்தி தேனூறல் சிறந்த ஊட்டச்சத்து தருவதாகும்.

யோக பாதை.

நம் கலாச்சாரத்தில் ஆறுவிதமான ஆன்மீகப்பாதைகள் உண்டு. அதில் ஒன்று யோக பாதை. யோகத்தின் பாதையில் பல்வேறு உள் பிரிவுகள் உண்டு. ஞான யோகம், பக்தி யோகம், ஜப யோகம், கர்ம யோகம் மற்றும் ராஜ யோகம் என ஐம்பெரும் பிரிவுகளாக இப்பிரிவுகள் வகைப்படுத்தப்படுகிறது. ராஜ யோகம் என்ற யோக பாதையின் உட்பிரிவில் குண்டலினி மற்றும் ஏழு சக்கரங்கள் இருக்கிறது அதன் செயலால் ஞானம் ஏற்படும் என்பதை விவரிக்கிறது. குண்டலினி என்ற சக்தி மூலாதாரம் என்ற இடத்தில் முக்கோண…

புளிச்சைக் கீரை (Hibiscus surattensis)

புளிச்சைக் கீரை புளிப்புச்சுவை கொண்டதான இந்தக் கீரையை கடைந்து, சாதத்துடன் சேர்த்து நல்லெண்ணெய் மற்றும் நெய் சேர்த்து பிசைந்து சாப்பிட நல்ல சுவையாக இருக்கும் எனினும் உடலில் புளிப்புச் சுவையை அதிகப்படுத்தப் பண்பு இதற்கு உள்ளது பாரம்பரிய மக்கள்  மீன்களை சமைக்கும் போது அவற்றுக்கு புளிப்புச்சுவை கொண்ட இந்த கீரையை பயன்படுத்துவார்கள்

சொத்தைக்களா (Falcourtia indica)

சொத்தைக்களா இது கவர்னர்ஸ் என்ற ஆங்கிலப் பொதுப் பெயரால் அழைக்கப்படுகிறது. இதன் பழங்கள் உண்ணத் தகுந்தவை. ஜாம் மற்றும் பலவிதமான பழச்சாறுகள் தயாரிப்பிலும் இதனைப் பயன்படுத்துகிறார்கள்.

கரிசாலை(வெள்ளை கரிசலாங்கண்ணி) Eclipta prostrata

கரிசாலை  (வெள்ளை கரிசலாங்கண்ணி) வெள்ளைக் கரிசலாங்கண்ணியின் இலைகளை நெய்யில் வதக்கிச் சாப்பிடலாம். இதனால் கண் பார்வை அதிகரிப்பதுடன் உடல் பலமும் ஏற்படும். ஏதாவது ஒரு வகையில் இந்த மூலிகையை உண்டு வர நரை,திரை முதுமை மாறும் என்பதாக நம் முன்னோர்கள் தெரிவித்து உள்ளனர் அதோடு,கல்லீரல் பலப்படும். இராமலிங்க வள்ளலார் கரிசாலையை காயகற்ப மூலிகைகளில் ஒன்றாகக் குறிப்பிடுகிறார். தினமும் காலையில் 5 பசுமையான இலைகளை மென்று சாப்பிட மலச்சிக்கல் தீரும். கரிசாலைச் சாற்றல் வாய் கொப்பளித்தால் பற்களும், ஈறுகளும்,…

1 – ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்

சூரியனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும் எதிலும் அவசரப் போக்கு உடையவர்கள், பொறுமை இவர்களிடத்தில் மிகவும் குறைவாக இருக்கும். தமது மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசக்கூடியவர்கள். மனதில் ஒன்று வைத்துக்கொண்டு, பேசுவதும் செயல்படுவதும் நன்றாக இருக்காது. இக்குணத்தால் மற்றவர்கள் இவரைப் பற்றி விமர்சனம் செய்யப் படுப்படுவார்கள். தன்னம்பிக்கை உடையவர்கள், தமது எண்ணத்திலும், செயலிலும் ஒரு போதும் தவறே இருக்காது என்பது இவர்களுடைய எண்ணம், உறுதியான நம்பிக்கையாகும்.

நறுவிலி, (Cordia dichotoma)

நறுவிலி பலவிதமான நுண்சத்துக்கள் நிறைந்து, குழந்தைகள் மற்றும் சிறுவர்களால் மிகவும் விரும்பி உண்ணப்படும் பழங்களில் இதுவும் ஒன்றாகும். கொழகொழப்புச் சுவை மிகுந்த இந்த பழம் வாய்,பல் மற்றும் ஈறு நோய்களுக்கும். மார்பு மற்றும் சிறுநீர்த்தாரை நோய்களுக்கும் சிறந்த துணை மருந்தாகும்.

எலுமிச்சை புல்(Cymbopogon citratus)

எலுமிச்சை புல் எலுமிச்சைப் புல்லைக் கொண்டு தேனீர் தயார் செய்யலாம். ஒரு டம்ளர் தயாரிக்க இரண்டு இலைகள் போதுமானது. இலைகளை நீரில் இட்டுக் கொதிக்க வைத்து வடிநீர் தயார் செய்துக் கொள்ள வேண்டும். இந்த வடிநீர் உடன் தேவையான அளவு பால்,சர்க்கரை அல்லது வெல்லம் மற்றும் இஞ்சி சேர்த்து கொதிக்க வைத்து சுவையான தேனீர் தயார் செய்து பருகலாம். எளிதாக வளரும் தன்மை கொண்ட இந்த புல்லை அனைவருக்கும் வீடுகளில் வளர்த்து பயன் பெற வேண்டும். எலுமிச்சை…

நல்வேளை

நல்வேளை பசுமையான இலைகளை பறித்து, மற்ற கீரைகளுடன் சேர்த்துக் கலவைக் கீரையாகத் துவட்டிச் சாப்பிடலாம். இலைகளை அளவாகச் சேர்த்து, கார குழம்பு செய்து சாப்பிட ஒற்றைத் தலைவலி குணமாகும். அதோடு, ஜலதோஷம் மற்றும் காய்ச்சலுக்கு  நல்வேளை சிறந்த துணை மருந்தாகத் திகழ்கிறது நல்வேளை இலை சிறிதளவு உப்பு சேர்த்து அரைத்து துவையலாகச் செய்து சாப்பிட இருமல் தீரும்.

(Coccinia grandis) கோவைப் பழங்கள்

கோவைப் பழங்கள் உண்ணுவதற்கு மிகவும் விருப்பமானவை. கோவைக்காய் கூட்டு மற்றும் பொறியல் செய்வதற்கு அதிக அளவில் பயன்படுகிறது மேலும் வற்றல் செய்வதற்கும் உகந்தது. இந்த வற்றலை நெய்யில் வறுத்துச் சாப்பிட இளைத்த உடலைத் தேற்றும், வயிற்று புழுக்களை வெளியேற்றும். சில நாட்டுப் பழங்குடி மக்களால் இதன் இளம் தளிர் இலைகளை உண்ணப்படுகின்றன கோவைக்காயை சாம்பார், கூட்டு போன்றவை செய்து சாப்பிடலாம்.

பால்பெருக்கி:

பால்பெருக்கி: இதனைக் கீரையாகச் சமைத்துச் நெய் சேர்த்து துவையலாக சாப்பிடலாம். இதனால் குடல் வாயு அகற்றும் செரிமான தன்மையும் அதிகரிக்கும். தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் பண்பு  இந்தக் கீரைக்கு உள்ளதால் தாய்ப்பாலூட்டும் பெண்மணிகளுக்கு வாரம் ஒரு முறை இந்த கீரையை சமைத்து சாப்பிட சிறந்த பலன் ஏற்படும். இறுகிப் போன பழைய மலத்தை வெளியேற்றும் குணமும் இதற்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

அருகம்புல் :

அருகம்புல் : அருகம்புல் சாறு தற்போது மிகவும் பிரபலம் . அருகம்புல்லின் முழுத்தாவரமும் இனிப்பு சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டதாகும். அருகம்புல்லை தூய்மையானதாக சேகரித்து இடித்து சாறு எடுத்துக் கொள்ளவேண்டும் , இந்த சாறுடன் சிறிதளவு தேன் சேர்த்து பானமாக பருகலாம் . இது ரத்தத்தை சுத்தி செய்வதுடன் உடல் வெப்பத்தையும் குறைக்கும். சிறுநீர்ப்பெருக்கி சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்தும் ஒரு கைப்பிடி அளவு அருகம் புல்லை அரைத்து பச்சையாக செய்து பசும்பாலில் கலக்கி குடித்து வர வெள்ளைப்படுதல்…

மாகாளிக்கிழங்கு :

மாகாளிக்கிழங்கு : மாகாளிக்கிழங்கு ஊறுகாய் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். இது இரத்தத்தை சுத்தம் செய்வதுடன் செரிமான தன்மையும் அதிகரிக்கிறது தற்போது நாட்டு மருந்து கடைகளில் உண்மையான நன்னாரிக்கு பதிலாக மாகாளிக்கிழங்கே அதிகம் கிடைக்கிறது. இதனை கொண்டு சர்பத் மற்றும் உடல் குளிர்ச்சி ஏற்படும் பலவிதமான பானங்களையும் தயார் செய்யலாம் . இவற்றை முறைப்படி பயன்படுத்தி வெப்ப காலத்தில் ஏற்படும் உடல் சூட்டையும் சிறுநீர் எரிச்சல் போன்ற உபாதைகளையும் தவிர்க்கலாம்.

சுக்கங்காய்: (சுகன்)

சுக்கங்காய் முதிராத காய்களில் சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு மற்றும் மோர் சேர்த்து கலவையில் ஊற வைத்து வற்றலாகக் செய்து கொள்ளலாம் . இதனை வற்றலை போல் வெயிலில் உலர்த்தி பத்திரப்படுத்தி கொண்டு தேவையான போது நெய் அல்லது நல்லெண்ணெயில் இட்டு வறுத்து சாப்பிட நன்றாகப் பசி எடுக்கும் தயிர் சாதம் மற்றும் பழைய சாதத்திற்கு இது சிறந்த துணை உணவாகும்.

காகனம் (சங்கு புஷ்பம்)

சங்கு புஷ்பம் மலர்களிலிருந்து இதழ்களை எடுத்து நீரில் இட்டு கொதிக்க வைத்து தேநீராக கூட அருந்தலாம் . இதனால் உடல் அரிப்பு குணமாகும். இதன் இதழ்களை கொண்டு சிரப், சர்பத் போன்றவை செய்து சாப்பிடலாம் . இதனால் உடல் சுறுசுறுப்பு அதிகமாவதுடன் உடலுக்கு நல்ல பலம் ஏற்படும். இதன் மலர் சாறை தேனுடன் கலந்து சாப்பிடுவதால் கல்லீரல் பலப்படும் தேமல் மற்றும் கரும் புள்ளிகளும் குணமாகும். இலைச் சாறு மற்றும் இஞ்சிச் சாறும் சம அளவு கலந்து…