கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.4 ராசிகளும் அதன் தன்மைகளும் தனுசு:-
தனுசு:- “வில்லானை சொல்லால் வளை” என்ற இந்த ராசி, அம்பு எய்யும் அமைப்பை போல் வான மண்டலத்தில் தோன்றும். இந்த ராசி காலபுருஷனின் ஒன்பதாவது ராசி ஆகும். இது 240 பாகை முதல் 270 பாகை வரை வியாபித்துள்ளது. இதன் அதிபதி குருவாகும். உபய ராசியாகிய இது ஒற்றை ராசி எனப்படும். ஆண் ராசி ஆகும், நெருப்பு தன்மையுள்ள இந்த ராசி வேகத்தையும், விபரீதத்தையும் உடையது. தென் முக ராசிகளில் மூன்றாவதாக வருவது,…