ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 2

கேள்வி – ஒருவர் கடவுள் காட்சியை எவ்வாறு பெறமுடியும்? பதில் – அது அவன் அருளால் தான் முடியும். ஆயினும் தியானமும், ஜபமும் ஒருவர் பழகவேண்டும். அது மனத்தின் மலங்களை அகற்றும். பூஜை முதலான ஆத்மிகக் கட்டுப்பாடுகளும் தேவையே. பூவைக் கையில் எடுத்தால் வாசனையை அறிவது போலவும் , கல்லின் மீது சந்தனக் கட்டையைத் தேய்த்தால் மணத்தை முகர்வது போலவும், ஏற்படும். அவனருளின்றி ஏதும் அடையமுடியாது. நாங்கள் எவ்வளவோ ஜபம் செய்தோம், ஆத்ம ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தோம். ஆயினும்…

சுடர்

நெற்றிக்கு நடுவே சுடரை நிறுத்தி யோசிக்கும் விஷயத்தை அந்த சுடரினில் வைத்து அந்த விஷயத்திற்குள் நேர் கோடாய் இறங்கி ஒன்றன்பின் ஒன்றாய் கேள்வி கேட்டு, பிரித்து அறிந்தால் குழப்பங்கள் தெரியும். பிரச்சனைகளுக்கு உண்டான தீர்வு கிடைக்கும்.