அக்ரா
கினி வளைகுடா பகுதியில் அமைந்துள்ள கானா நாட்டின் தலைநகர் மற்றும் (ம.தொத.,2001 மதிப்பீடு 15,51,200) 1482-ல் போர்த்துகீசியர்கள் இப்பகுதியில் முதன்முதலில் குடியேறிய போது, இந்தப் பகுதி ‘கா’ மக்களின் குடியிருப்பாக இருந்தது. 1650-80களில் பாதுகாப்பு மிக்க மூன்று வணிக மையங்கள் முறையே டேனியர்கள், டச்சுகாரர்கள் மற்றும் பிரிட்டிஷாரால் கட்டப்பட்டன. டேனியர்களும் டச்சுகாரர்களும் முறையே 1850 மற்றும் 1872ல் இப்பகுதியை விட்டு வெளியேறினர். 1877ல் அக்ரா பிரிட்டிஷ் கோல்ட் கோஸ்ட் காலனியின் தலைநகரமானது. 1957ல் கானா சுதந்திரம் அடைந்த…