ஸோஹம்

ஸோ – என்ற நாதத்துடன் காற்றை உள்ளே இழுத்து  ஒசை எழுப்பி ‘ ஹம் ‘ என் ற ஒசையுடன் அதை வெளியே விட்டு, ஒலி எழுப்பும்போது, பிரசித்தி பெற்ற ஒங்கார நாதமாகிய ‘ ஸோஹம்’ இணைகிறது. இதுவே சூட்சும பஞ்சாட்சரம்.

காரை (Canthium parviflorum)

காரை சிறுகாரை என்று சொல்லப்படும் இதன் இலைகள் மற்றும் பழங்கள் உண்ணப்படுகின்றன. குறிப்பிட்ட இடைவெளிகளில் இதை குழந்தைகளுக்குக் கொடுக்க வயிற்றுப் புழுக்கள் வெளியாகும். சமைத்த உணவுகளை பதப்படுத்தவும் காரை இலைகள் பயன்படுகின்றன. குரங்குகளும், சிலவகைப் பறவை இனங்களும் காரை பழங்களை விரும்பி உண்கின்றன. இவற்றின் மூலமாக காரை விதைகள் இனப்பெருக்கம் அடைகின்றன.