வாழ்க்கைங்கிறது

கோமு -ஒரு சந்தேகம் காமு -என்ன கோமு- வாழ்க்கைங்கிறது என்ன தொடர்ந்து நடந்துகிட்டு இருக்குற மரணமா இல்ல தொடர்ந்து நடந்துகிட்டு இருக்கிற ஜனனமா? காமு- ரெண்டும்தான் கோமு – இப்படி சொன்னா எப்படி கொஞ்சம் விளக்கமா இல்லாட்டி புரியறமாதிரி சொல்லு காமு-  இங்க பாரு சந்தோசமா வாழ்ந்துகிட்டு இருக்கிறவனுக்கு மரணத்தோட ஞாபகமே வராது துக்கத்தில வாழ்ந்துகிட்டு இருக்கிறவனுக்கு மரணத்தோட சிந்தனை வந்துகிட்டே இருக்கும் இதுல தமாஷ் என்னன்னா ரெண்டுபேரும் மரணம் அடைவாங்க  கோமு -நான் கேட்டது மரணம்…

நினைவில் வைத்துக்கொள்ள

காமத்தை விட கொடிய நோய் இல்லை. அறியாமையை விட கொடிய எதிரி இல்லை. கோபத்தை விட கொடிய நெருப்பு இல்லை, எவன் ஒருவனுக்கு செல்வம் இருக்கிறதோ, அவனுக்கு உறவினர்கள் உண்டு, நண்பர்கள் உண்டு. பிறவி குருடனுக்கு கண் தெரிவதில்லை, அது போல் காமம் உள்ளவனுக்கு கண் தெரியாது, பெருமை உள்ளவனுக்கு கெடுதி தெரியாது, பணம் செய்யவேண்டும் என்ற எண்ணம் உள்ளவனுக்கு பாவம் தெரியாது. பேராசை கொண்டவனை பரிசு கொடுத்தும், பிடிவாதம் உள்ளவனை சலாம் போடுவதன் மூலமும், முட்டாளை…

அன்னை சாரதா தேவியின் அன்பு முரசு

உடன் சாதனப் பயிற்சியிலும், சொல்லிலும், செயலிலும் உண்மையாக இரு, அப்போது எவ்வளவு இன்பமாக உள்ளோம் என்பதை உணர்வாய். உலகிலுள்ள எல்லாப்பிராணிகளின் மீதும் ஆண்டவனது கருணை மழை பெய்கின்றது. அது வேண்டும் எனக்கேட்பது அவசியம் இல்லை. நீ உண்மையாகத்தியானம் பழகு. அப்போது ஆண்டவனின் அளவற்ற கருணையின் இருப்பை உணர்ந்து கொள்வாய். ஆண்டவன் நேர்மையையும் சத்தியத்தையும், அன்பையுமே விரும்புவான். வெளிப்பகட்டானவாய் வார்த்தைகள் அவனைத் தீண்டுவதுமில்லை.