௮ரைகீரை (AMARANTHUS TRICOLOR)
௮ரைகீரை தளிர் மற்றும் முதிர்ந்த இலைகளை கீரையாகக் கடைந்தோ ௮ல்லது சாம்பார் செய்தோ சாப்பிடலாம். அதோடு இதன் தண்டுகளைக் கடைந்தோ, கூட்டு ௮ல்லது சாம்பாரில் இட்டு வேகவைத்து சாப்பிட நல்ல சுவையாக இருக்கும். இலைகளில் புரதச் சத்து 5.2%, கொழுப்பு 0.3%, நார்ச்சத்து 6.1%, மாவுச்சத்து 3.8% மற்றும் தாது ௨ப்புகள் 2.8% ௮ளவிற்கு நிறைந்துள்ளது. அதோடு ,கால்சியம், பாஸ்பரஸ் ,இரும்புச் சத்து மற்றும் வைட்டமின்-சி அகியவையும் அடங்கியுள்ளன.